Saturday, April 20, 2019


நிலாச் சோறு!
  வாழ்வின் அருமையானச் சேமிப்பு - நினைவுச் சேமிப்பு. பழைய நினைவுகளை அசைப்போடுதலும், தோழமையடன் பகிர்ந்து கொள்வதும் ஓர் ஆனந்த அனுபவம். அவ்வாறு மனதில் தோய்ந்த ஒரு பசுமையான நினைவு, சித்திரைப் பௌர்ணமி அன்று உண்ணும் நிலாச் சோறு.

      மதுரை நகர் மக்களுக்கு சித்திரை மாதம் கொண்டாட்டம் நிறைந்த மாதம். மதுரை மீனாட்சி அம்மனுக்கு பூப்பல்லக்கு, திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேர் என்றுத் தொடர்ந்து திருவிழாக் கோலம் கொண்டு விளங்கும். சித்திரைப் பௌர்ணமி அன்று அழகர்ஆற்றில்   இறங்குவார். அந்நிகழ்ச்சியின் வரலாற்றையும் தன் காலத்தில் எவ்வளவுச் சிறப்பாய் நிகழும் என்பதையும் பாட்டி சொல்லிக் காட்டுவார்.

        அன்று இரவு மொட்டை மாடியில் சுசீலா அத்தை, அத்திம்பேர், ராஜி அக்கா, ரமேஷ் அண்ணா, விஜி அக்கா, ஹரி, ராதிகா, அம்மா, பாட்டி மற்றும் நான், என்று அனைவரும் நிலா வெளிச்சத்தில் உண்டுக்கதை பேசி, விளையாடிய நாட்கள் என் நினைவுச் சேமிப்பில் பத்திரமாய் உள்ளது.

பழையப் பழக்கவழக்கம் தொட்டுப் புதிய நினைவுகளையும் சேமிக்க வேண்டும் அல்லவா? இப்பேரார்வத்தல் என் மனம் ஒத்தத் தோழி அனு. இந்தச் சித்திரைப் பௌர்ணமிக்கு நிலாச்சோறு உண்ணத் திட்டமிட்டோம். நிலவு மேகத்தில் ஒளிந்தே ஒளிபரப்ப, சவுத் வின்டசரில், வீட்டின்த்தோட்டத்தின் குளக்கரையில் உண்டோம் நிலாச்சோறு!

 சாய்ஜோஷ், நிமல், அனு, கார்த்திக், மணி, சுபாவின் நினைவுப் பெட்டகத்தில் இன்று புதியச்சேமிப்பு! 

No comments:

Calm through Art

Naan(I) When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”.  Choosing...