களிப்போடு விளையாடும்
கண்சிரிக்கும் என் கண்ணா!
கண்ணுறங்க நேரமாச்சு,
களைப்பாறு வா கண்ணா!
நிலவு வந்து நேரமாச்சு,
நீண்ட நேரம் ஆடியாச்சு,
நாளை மீண்டும்
நேரத்தில் எழுந்திடுவாய் என் கண்ணா!
கண்பொத்தி விளையாட்டு,
கவின்குரலில் பலபேச்சு,
கலகலக்கும் உன் சிரிப்பில்
கரைந்து விடும் என் நேரம்!
ஊரும் உறங்கியாச்சு,
உடலும் அயர்ந்தாச்சு,
உள்ளத்தில் அமைதி கொண்டு
உறங்கிடுவாய் என் கண்ணா!
No comments:
Post a Comment