கடினம், உறுதி கொண்ட
கற்பாறை நான்!
மரணம், தனிமை
பயம் தவிர்த்தேன்,
சோம்பல் துறந்தேன்,
வலிமை, உரம் சேர்த்து
உறுதி கொண்டேன்.
வலிமையின் பயன்
கருணை, ஆதலால்
எளிய புல்லிற்க்கு என்னுள்,
இடம் கொடுப்பேன்.
கடின உரம் கொண்ட போதிலும்,
எனக்கு அழிவில்லை
என்று நான் இறுமாப்பு
கொள்வதில்லை.
தோற்றமும் அழிவும்,
எனக்கும் இயல்பே.
No comments:
Post a Comment