அழகே ஒளியாய்ப் பொழிந்து
வானவீதி வரும் உலா,
இரசிகரின் மனதை அள்ளும்
இத்தென்னை மரத்து நிலா!
கடினம், உறுதி கொண்ட
கற்பாறை நான்!
மரணம், தனிமை
பயம் தவிர்த்தேன்,
சோம்பல் துறந்தேன்,
வலிமை, உரம் சேர்த்து
உறுதி கொண்டேன்.
வலிமையின் பயன்
கருணை, ஆதலால்
எளிய புல்லிற்க்கு என்னுள்,
இடம் கொடுப்பேன்.
கடின உரம் கொண்ட போதிலும்,
எனக்கு அழிவில்லை
என்று நான் இறுமாப்பு
கொள்வதில்லை.
தோற்றமும் அழிவும்,
எனக்கும் இயல்பே.
Naan(I) When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”. Choosing...