Friday, January 12, 2024

Calm through Art

Naan(I)

When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”. Choosing computer science over biology was an easy decision for me, for I was scared of drawing.


Today, as a data scientist building credit strategies, I do critical thinking all day my work day. To my own surprise, the hobby I resorted to unwind is sketching & painting.    


I find so much joy in the process of following the tool, spreading the color and drawing patterns. This is the time when I don’t think and just be. I continue to read books and still fond of listening to music as I have always had. However, the calm that I have started experiencing through art is nothing that I have experienced before. Art is my meditation.


This post has the compilation of my works for the  Bharathiyar poem, “Naan (I)”. 

Of course, from the pictures one can see that I still don’t do straight lines 😉



Thursday, September 7, 2023

மாலை மழை!

 



மழலையின் ஓயா மொழி போல், 

அன்னையின் தீரா அன்பைப் போல், 

ஆசானின் அளவில்லாக் கருணைப் போல், 

நேர்மை நட்பின் இனிமை போல், 

மனதையும் மண்ணையும் நனைத்துப் பொழிந்தது, 

மாலை மழை!

பயன்!

மலர்தலே பயன், மலருக்கு, 

வாழ்வதே பயன், வாழ்க்கைக்கு!

எண்ண அலை

 


ஆயிரமாயிரம் அலைகளாய்,

எழுந்து மறையும் எண்ணங்கள்! 

அழகியச் சிப்பிகளைக் கொண்டுச் சேர்க்கும் சில எண்ணங்கள், 

நிலைத்தப் பாறையையும் அரித்துச் செல்லும் சில எண்ணங்கள்!

சரவணன்!

தீர்க்க வேண்டிய சண்டைகள், 
வளர வேண்டிய நட்பு, 
பகிர வேண்டிய நிகழ்வுகள், 
தேங்கிக் கிடக்கின்றன, 
மனதில் ஓர்ஓரமாய்! 

மூன்று வருடங்கள் பகிர்ந்த 
நட்பின் தரத்தை,
இருபது வருடங்கள் கழிந்தும், 
உன் இன்மையை உணர்தலில் உணர்கிறேன்!

Saturday, August 12, 2023

தென்னை மரத்து நிலா!

 



அழகே ஒளியாய்ப் பொழிந்து

வானவீதி வரும் உலா,

இரசிகரின் மனதை அள்ளும்

இத்தென்னை மரத்து நிலா!

கற்பாறை


கடினம், உறுதி  கொண்ட 

கற்பாறை நான்!

மரணம், தனிமை 

பயம் தவிர்த்தேன்,

சோம்பல் துறந்தேன்,

வலிமை, உரம் சேர்த்து 

உறுதி கொண்டேன்.

வலிமையின் பயன்

கருணை, ஆதலால்

எளிய புல்லிற்க்கு என்னுள்,

இடம் கொடுப்பேன்.

கடின உரம் கொண்ட போதிலும்,

எனக்கு அழிவில்லை 

என்று நான் இறுமாப்பு

கொள்வதில்லை.

தோற்றமும் அழிவும்,

எனக்கும் இயல்பே.


 

Calm through Art

Naan(I) When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”.  Choosing...